கபாலி பற்றிய சில சுவையான தகவல்கள்

kabali

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படத்தை எப்போது திரையில் பார்ப்போம் என பல கோடி ரசிகர்கள்
காதத்திருக்யில் இப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது, இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு உள்ளனர்.

மதுரையை கலக்கும் கபாலி சுவர் ஓவியங்கள்
ரஜினியின் கபாலி படத்திற்கு என்னென்னமோ வரவேற்பு கிடைத்து வருகிறது, விரைவில் சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படம் வெளியாகவுள்ளதால் மதுரையில் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்கள் சுவர் விளம்பரங்களை வரைந்து வருகின்றனர்.

போஸ்டர் ஒட்டுவது, சுவர் ஓவியங்கள் வரைவதில் மதுரைக்காரர்களை யாரும் மிஞ்சமுடியாது. இந்த கலாச்சாரம் வேறூன்றி, செழித்து வளர என்றும் பெருந்துணையாய் இருப்பவர்கள் நம் திரை உலக நாயகர்கள் தான்.என்னதான் நவீன தொழில் நுட்பத்தில் போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்கள், கொடி, தோரணம் வந்தாலும் மதுரையை பொறுத்தவரை இன்னமும் சுவர் விளம்பரங்கள் ஆங்காங்கே காட்சி அளித்து கொண்டுதான் உள்ளன.

 
வாட்ஸ் அப்பில் சூப்பர் ஸ்டார்

 

whatsapp kabali emoji

சென்னை: வாட்ஸ் அப்பில் புட்பால் ஐகான் (Activity)-க்கு கீழே இடம்பெற்றுள்ள 2வது வரிசையில் 12வது இடத்தில் ஒரு எமோஜி வலம் வந்துகொண்டுள்ளது. அந்த எமோஜி ரஜினி கபாலியை குறிப்பதாக பரப்பப்பட்டு வருகிறது. , ரசிகர்கள் உற்சாகமடைந்து அதனை பரப்ப துவங்கிவிட்டார்கள். ஸ்டைலுடன் பாட்ஷா படத்தில் ரஜினியின் தோற்றத்தை அந்த எமோஜி கொண்டிருக்கிறது.

 
ஜாக்கி சானுடன் சூப்பர் ஸ்டார் ரஜினி

rajni and jackie chan movie

இன்னொரு பக்கம் ஜாக்கி சானுடன் அவரை இணைத்து ஒரு படம் உருவாக்கும் முயற்சியும் நடக்கிறது. இது குறித்துப் பேசுவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.